உள்ளூர் செய்திகள்
சேலத்தில் தீ விபத்தில் இளம்பெண் படுகாயம்
- செல்வி (வயது 38). இவர் வீட்டிலேயே இரவு நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார்.
- நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் செல்வி பணியாரம் செய்து கொண்டிருந்த போது கியாஸ் அடுப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் வீட்டிலேயே இரவு நேரத்தில் பணியாரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் செல்வி பணியாரம் செய்து கொண்டிருந்த போது கியாஸ் அடுப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் செல்வியின் 2 கைகளிலும் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த செல்வியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.