உள்ளூர் செய்திகள்
- கொரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (43). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
- இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (43). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குசென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.