உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம். 

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை; காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி

Published On 2023-05-24 14:50 IST   |   Update On 2023-05-24 14:50:00 IST
  • பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார்.
  • இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

ஆத்–தூர்:

சேலம் மாவட்–டம் ஆத்–தூர் அருகே உள்ள பைத்–தூர் கிரா–மம் 9-வது வார்டை சேர்ந்–த–வர் கணே–சன் (வயது 44), எலக்ட்–ரீ–சி–யன். இவ–ரு–டைய முதல் மனைவி சத்யா. இவர்–க–ளுக்கு பிர–வீணா, மேகலா என்ற 2 மகள்–கள் உள்ள–னர். பிர–வீ–ணா–வுக்கு திரு–ம–ணம் ஆகி–விட்–டது.

பிளஸ்-2 மாணவி

பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார். முதல் மனைவி சத்யா இறந்–து–விட்–ட–தால் கணே–சன் வெள்–ளை–யம்–மாள் என்–ப–வரை 2-வதாக திரு–ம–ணம் செய்து கொண்–டார். இவர்–க–ளுக்கு 2 வய–தில் பிர–வீண் என்ற மகன் உள்–ளார்.

இந்த நிலை–யில் பிளஸ்-2 முடித்த மேகலா தனது தந்–தை–யி–டம் கல்–லூ–ரி–யில் சேர்ந்து மேற்–ப–டிப்பு படிக்க வேண்–டும் என்று கூறி–னார். ஆனால் இதற்கு கணே–சன் மறுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது. இது–தொ–டர்–பாக தந்தை, மகள் இடையே அடிக்–கடி வாக்–கு–வா–தம் ஏற்–பட்டு வந்–துள்–ளது.

தற்–கொலை

இந்த நிலை–யில் நேற்று மாலை வீட்–டில் பிர–வீண் டி.வி.யில் கார்ட்–டூன் படம் பார்த்–துள்–ளான். அப்–போது மேகலா ரிமோட்டை எடுத்து வேறு ஒரு சேனலை மாற்–றி–னார். இத–னால் பிர–வீண் அழு–துள்–ளான்.

அந்த நேரத்–தில் வீட்–டுக்கு வந்த கணே–சன், மேக–லா–வி–டம் இருந்து டி.வி. ரிமோட்டை வாங்கி கீழே போட்டு உடைத்–தார். இத–னால் தந்தை, மகள் இடையே வாக்–கு–வா–தம் ஏற்–பட்–டது. அப்–போது மன–வே–தனை அடைந்த மேகலா நான் கிணற்–றில் குதித்து தற்–கொலை செய்து கொள்ள போகி–றேன் என்று கூறி–விட்டு வீட்–டின் அரு–கில் உள்ள கிணற்றை நோக்கி ஓடி–னார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணே–சன் மகளை காப்–பாற்–று–வ–தற்–காக பின் தொடர்ந்து ஓடி–னார். ஆனால் அதற்–குள் கிணற்–றில் குதித்த மேகலா தண்–ணீ–ரில் மூழ்கி பலி–யா–னார். அதே நேரத்–தில் மகளை காப்–பாற்ற கணே–ச–னும் கிணற்–றுக்–குள் குதித்–தார். எதிர்–பா–ரா–த–வி–த–மாக அவ–ரும் தண்–ணீ–ரில் மூழ்கி பரி–தா–ப–மாக இறந்–தார். இதை பார்த்த வெள்–ளை–யம்–மாள் சத்–தம் போட்–டார். இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் அங்கு திரண்டு வந்–த–னர்.

மாணவி உடல் மீட்பு

இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் ஆத்–தூர் தீய–ணைப்பு நிலைய அலு–வ–லர் அசோ–கன் தலை–மை–யில் வீரர்–கள் அங்கு விரைந்து சென்–ற–னர். பின்–னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மாணவி மேக–லா–வின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்–த–னர்.

உறவினர்கள் கதறல்

தொடர்ந்து கணே–ச–னை தீயணைப்பு வீரர்கள் தேடினர். கிணறு பல அடி ஆழம் என்பால் நீரில் மூழ்கிய கணேசனின் கதி என்ன? என தெரியாமல் இருந்தது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியை நிறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினர் கிணற்றின் கரையில் கூடி சோகத்துடன் இருந்தனர். இன்று காலை கணேசன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார், உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோ–த–னைக்–காக அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர். இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

Tags:    

Similar News