சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்லும் காட்சி.
சங்ககிரி ஆர்.எஸ்.சில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சங்ககிரி:
சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடியில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் ெரயில்வே மேம்பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் இல்லாததால் பொதுமக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமித்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.