உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய , பழைய பஸ் நிலைய பகுதிகளில்73 தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பு

Published On 2023-11-09 09:19 GMT   |   Update On 2023-11-09 09:19 GMT
  • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
  • இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சேலம்:

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பட்டாசு, இனிப்பு மற்றும் ஜவுளிகள் வாங்கி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அனுமதி

இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது கடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று கடைகளில் பட்டாசுகள் வியாபாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆர்வம்

பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆர்வமாக பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் பட்டாசு கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் பட்டாசு கடைகளில் மேலும் கூட்டம் குவியும் என்பதால் புதிய ரக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு குவிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News