உள்ளூர் செய்திகள்

சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-15 09:00 GMT   |   Update On 2023-10-15 09:00 GMT
  • சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
  • இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசினார்.

அன்னதானப்பட்டி:

சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள நபர்களை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காணாமல் போன நபர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், துணை சூப்பிரண்டு சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமல்அட்வின், தமிழ்வாணன், சின்னசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News