என் மலர்
நீங்கள் தேடியது "Crime prevention"
- சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசினார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள நபர்களை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போன நபர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், துணை சூப்பிரண்டு சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமல்அட்வின், தமிழ்வாணன், சின்னசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது.
காங்கயம் :
காங்கயம் திருப்பூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் காங்கயம் நகரம், ஊராட்சி பகுதிகளில்குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது, சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது, அனைத்து பொது இடங்கள் மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மகேஷ்குமார், நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊதியூர், காங்கயம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






