உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

Published On 2023-11-02 09:11 GMT   |   Update On 2023-11-02 09:11 GMT
  • ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
  • இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.

கருப்பூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News