தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகேபிரபல போட்டோ ஸ்டுடியோவில் தீ விபத்து
- சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது.
- இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது. இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டுடியோவில் இருந்த புகைப்படங்கள், புகைப்பட கருவிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.