உள்ளூர் செய்திகள்

ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் 6 நாட்கள் ரத்து

Published On 2023-06-17 12:48 IST   |   Update On 2023-06-17 12:48:00 IST
  • ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
  • ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் மற்றும் மதியம் 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

சேலம்:

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பரா மரிப்பு பணி மேற்கொள்ளப் பட்ட உள்ளதால் வருகிற 18, 20, 22, 24, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 6:25 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் மற்றும் மதியம் 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News