உள்ளூர் செய்திகள்

பொது சிவில் சட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-29 13:20 IST   |   Update On 2023-07-29 13:20:00 IST
  • மணிப்பூரில் நடைபெறும் சம்பவங்களை கண்டித்தும் பொது சிவில் சட்டத்தை கைவிட கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடந்தது.
  • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சேது மாதவன் தலைமை தாங்கினார்.

சேலம்:

மணிப்பூரில் நடைபெறும் சம்பவங்களை கண்டித்தும் பொது சிவில் சட்டத்தை கைவிட கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சேது மாதவன் தலைமை தாங்கினார். இதில் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர், முத்தவல்லி சங்கத் தலைவர் அமான் என்கிற நாசர் கான் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது, இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள் உள்ளன. பன்முகத்துவத்தில் உள்ள இந்தியா உலகுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. பா.ஜ.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற காலம் முதல் பன்முகத்துவத்தை ஒழித்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற ஒற்றை தன்மையை திணித்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. குற்றவியல் சட்டங்களைப் போல சிவில் உரிமைகள் சார்ந்த சட்டங்கள் ஏற்கனவே நாட்டில் அனைவருக்கும் பொதுவாக உள்ளது. சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி வாக்கு வங்கி அரசியலை முன்வைத்து செயல்படுவதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News