கடன் சங்க நிறுவனரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை
- தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி சிக்கனம் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி, தமிழகம் முழுவதும் 1000 கிளைகள் திறக்கப்பட்டன.
- இதில் சேலத்தில் அழகாபுரம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய 2 கிளைகள் அடங்கும்.
சேலம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி சிக்கனம் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி, தமிழகம் முழுவதும் 1000 கிளைகள் திறக்கப்பட்டன. இதில் சேலத்தில் அழகா புரம், அயோத்தியாப்பட்ட ணம் ஆகிய 2 கிளைகள் அடங்கும்.
சேலம் அம்மாபேட்டை யை சேர்ந்த பாஸ்கரன், அயோத்தியாப்பட்டணம் கிளையில் பல்வேறு திட்டத்தில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்து முதிர்வுக்கு பின் திரும்ப பெற முடியாமல் பாதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், போலி கூட்டுறவு சங்கம் திறந்து தமிழக முழுவதும் ரூ.58 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அயோத்தியாப்பட்டணம் சங்க கிளை தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்க நிறுவனர் தங்கப்பழம் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் தங்கபழத்தை போலீஸ் காவலில் எடுத்து 4 நாட்கள் விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையாடுத்து நீதிபதி செந்தில் குமார் மனுவை ஏற்று, 2 நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை அடுத்து போலீசார் தங்கபழத்தை சேலத்திக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
தொடர்ந்து மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.