உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தளவாய்பட்டி பால் பண்ணை முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தளவாய்பட்டி பால் பண்ணை முன்பு கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-19 09:48 GMT   |   Update On 2023-10-19 09:48 GMT
  • பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் தளவாய்பட்டி பால் பண்ணை அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பசும்பால் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், எருமை பால் விலையை லிட்டருக்கு 54 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் மாட்டு தீவனங்களை வழங்க வேண்டும்,

கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News