சங்ககிரியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் அறிவுடைநம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சங்ககிரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
- சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சங்ககிரி:
சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்தவிதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணி
தொடர்ந்து பேரணி சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கி பவானி சாலை, புதிய எடப்பாடி சாலை வழியாக சென்று மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் கீதா, பி.எஸ்.ஜி. கல்லுாரி மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்புமலர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.