உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலைஅண்ணன் - தம்பி உள்பட 4 பேரை போலீஸ் தேடுகிறது

Published On 2023-06-06 15:00 IST   |   Update On 2023-06-06 15:00:00 IST
  • வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் ஆர்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • எதிர்பாராத விதமாக, கோபிநாத்தின் மோட்டார் சைக்கிளும், சக்திவேலின் மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.

சேலம்:

சேலம் அருகே உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33). தனியார் நிறுவன மார்க்கெட்டிங் பிரதிநிதி யான இவர், நேற்று வாழப்பாடி அருகே பேளூ ரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் ஆர்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் அருகே சென்றபோது, எதிரே மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் மொபட்டில் வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக, கோபிநாத்தின் மோட்டார் சைக்கிளும், சக்திவேலின் மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.

தகராறு

இந்த நிலையில், சேத மான தனது மொபட்டை சரி செய்ய பணம் கேட்டு சக்திவேல் மற்றும் அவரு டன் வந்த அவரது அண்ணன் சரவணன் ஆகி யோர் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோபிநாத் பணம் தர மறுக்கவே, சக்திவேல் அவரது நண்பர்கள், உறவி னர்களை செல்போனில் அழைத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.

கொலை

இதையடுத்து அங்கு வந்த சக்திவேலின் நண்பர்க ளான தேவ், சந்தோஷ் ஆகியோரும், சக்திவேல், சரவணனுடன் சேர்ந்து, கோபிநாத்திடம் தகராறில் ஈடுபட்டு கடுமையாக தாக்கினர். இதில் கோபிநாத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்து அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கோபிநாத் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

4 பேருக்கு வலைவீச்சு

ஏற்கனவே உடல் நலம் சரியில்லாத கோபிநாத்துக்கு விபத்தில் சிக்கி சாலையில் விழுந்ததில் தலையில் அடி பட்டுள்ளது. இந்த சூழலில் சக்திவேல் மற்றும் நண்பர்கள் அவரை தாக்கி யுள்ளனர். இதனால் படுகா யத்துடன் சாய்ந்த கோபிநாத் இறந்தது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், அவரது அண்ணன் சரவணன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News