உள்ளூர் செய்திகள்

கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தை ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்ட காட்சி.

கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம்

Published On 2023-07-30 13:59 IST   |   Update On 2023-07-30 13:59:00 IST
  • சேலம் செட்டிச்சாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
  • அ.தி.மு.க கவுன்சிலர்களான சுரேஷ், முனியப்பன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சேலம்:

சேலம் செட்டிச்சாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரிந்து வருபவர்களை செட்டிச்சாவடி ஊராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்களான சுரேஷ், முனியப்பன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது பொய் புகார் கொடுத்ததாக கூறி சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஏ .வி.ராஜூ தலைமையில் ஏராளமானோர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அ.தி.மு.க.வினர் மீது கொடுத்த பொய் புகாரை திரும்ப பெற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கி ருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சமரசம் ஏற்படாத தால் மீண்டும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.அப்போது கன்னங்குறிச்சி பேரூர் செயலாளர் சிவகுமார், நிர்வாகி கள் மாதேஷ், கனகராஜ், சந்திரா, ஹேமா, ஜெபராஜ், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரவீன் குமார், செட்டி சாவடி ஊராட்சி கிருஷ்ணன், பாஸ்கர், பால முருகன், வினோத்குமார், சரவ ணன், சுரேஷ் ரித்தீஷ், சங்கர், ராஜ்குமார் சேலத்தாம்பட்டி பரசுராம், சேகர், பரணி, சக்தி, கொண்டபப நாயக்கனபட்டி சுகுமார் கருணாகரன், முனுசாமி, ஞானசேகர்,சங்கர், தளவாய்பட்டி கலைமணி, ராஜா, பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News