உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.

சேலத்தில் இன்று விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-20 13:26 IST   |   Update On 2023-07-20 13:26:00 IST
  • தி.மு.க அரசை கண்டித்து இன்று காலை சேலம் கலெக்டர் அலுவல கம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
  • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலா ளர் ஜி.வெங்கடாஜலம் வர வேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

சேலம்:

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காய்கறி விலை உயர்வு மற்றும் அத்தியா வசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வையும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து இன்று காலை சேலம் கலெக்டர் அலுவல கம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலா ளர் ஜி.வெங்கடாஜலம் வர வேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி கலந்து கொண்டு ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தக்காளி வெங்காயம் முருங்கைக்காய் வாழைக்காய் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். முதல்- அமைச்சருக்கு விலைவாசி உயர்வை பற்றி எந்த கவலையும் இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

சென்னையில் சைதாப்பேட்டையில் ஒரு பெண் இன்று காலை படு கொலை செய்யப்பட்டுள் ளார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகளிர் உரிமை தொகைக்கு தற்போது விண்ணப்பங்கள் தான் வழங்கப்படுகின்றன. இதில் தகுதியானவர்கள் பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அனைவருக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ள வில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவகுமார் அருகில் தமிழக முதல்-அமைச்சர் பெங்க ளூரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். இதனை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

தமிழக மக்கள் அனை வரும் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பாலசுப்பிர மணி, ராஜாமுத்து, சித்ரா, ஜெயசங்கரன், நல்லதம்பி, மணி, சுந்தர்ராஜன், அவைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்வராஜூ, ரவிச்சந்தி ரன், சக்திவேல், மனோன் மணி, வெற்றிவேல், பல்பாக்கி கிருஷ்ணன், ராஜா, சின்னதம்பி, மாதேஸ்வரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்க டாசலம், பகுதி செயலாளர் பாலு, மாரியப்பன், சரவ ணன், முருகன், யாதவ மூர்த்தி, ஜெயபிரகாஷ் சண்முகம், பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜீ, வையாபுரி, பொதுக்குழுஉறுப்பினர் பட்டு ராமச்சந்திரன், ஜான் கென்னடி, பேரவை செயலாளர் சரவணமணி, இணைச் செயலாளர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அசோக்குமார், தலைவர் அருள்ராம், இணைச் செயலாளர் ஜிம் ராமு, வக்கீல் பிரிவு செயலாளர் வீரக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு வக்கீல் கனகராஜ், முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், வர்த்தக அணி ராம்ராஜ், சாம்ராஜ், ஜெகதீஷ்குமார், உமாராஜ், சரோஜா, பாமா கண்ணன்,

கூட்டுறவு வங்கிதலை வர்கள் வே பிரிட்ஜ் ராஜேந்திரன், கர்ணன், கண்ணன், கவுன்சிலர்கள் கே.சி. செல்வராஜ், ஜனார்த் தனன், சந்திரா கிருபாகரன், மோகனப்பிரியாசிவகுமார், வட்டச் செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், பிர காஷ், செந்தில்குமார், மார்க்க பந்து, விநாயகம், ரஞ்சித், ஜெகதீஷ், தங்கராஜ், ஸ்ரீதர் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரவீன்குமார், ரமளிசக்தி, தினேஷ், அன்பு, சந்துரு, சகாயம், கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற பெண்கள் காய்கறி கூடைகளை சுமந்த படியும் கையில் பதாகைகளை ஏந்திய படியும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News