உள்ளூர் செய்திகள்

சேலம் அஸ்தம்பட்டி முனியப்பன் கோவில் வளாகத்தில் சிறைத்துறை சார்பில் நூலகம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் சிறைத்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி. 

சேலத்தில் ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய புதிய நூலகம்

Published On 2023-09-01 09:54 GMT   |   Update On 2023-09-01 09:54 GMT
  • மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
  • போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

சேலம்:

தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.

இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News