உரிமமின்றி கடை நடத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்
- உணுவு வணிகம் புரிவோர், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
- உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது தண்டனைக்குரிய குற்றம். 6 மாத சிறை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உணுவு வணிகம் புரிவோர், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெங்கவல்லி, காடை யாம்பட்டி, கொங்கணா புரம், வாழப்பாடி, வீர பாண்டி, ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிக ளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் பணி மேற்கொள்ளப் பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது தண்டனைக்குரிய குற்றம். 6 மாத சிறை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், உணவு வணிகம் புரிவோர் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கான உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்பனை உள்ளவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல் வேண்டும்.
ரூ.12 லட்சத்துக்கு கீழ் விற்பனை உள்ளவர்கள் பதிவு சான்றிதழ் பெற்றால் போதும். உரிமம் பெறு வதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி பெற்று கொள்ள லாம். பதிவு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.100 ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி பெற்று கொள்ள லாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.