உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மேற்பார்வையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய நர்சு.

வாழப்பாடி வட்டாரத்தில் 2-ம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம்

Published On 2023-09-14 13:47 IST   |   Update On 2023-09-14 13:47:00 IST
  • தமிழகம் முழுவதும் வாரந்தோறும் புதன்கிழமை களில் கிராம சுகாதார நர்சுகள் வாயிலாக கிரா மங்களுக்கே சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துப்படுகிறது.
  • குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மிஷன் இந்திரா தனுஷ் எனும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு வார காலம் வீடு தேடி சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

வாழப்பாடி:

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் புதன்கிழமை களில் கிராம சுகாதார நர்சுகள் வாயிலாக கிரா மங்களுக்கே சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துப்படுகிறது. இதில், பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மிஷன் இந்திரா தனுஷ் எனும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு வார காலம் வீடு தேடி சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது கடந்த 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், அக்டோபர் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலும் இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் இம்மாதத்திற்கான குழந்தை களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

சமுதாய சுகாதார நர்சு சிவகாமி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

ஆத்தூர் சுகாதார மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் ரேவதி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ரமா பிரியா, பிரியதர்ஷினி, நர்சுகள் சுதா, தீபா, மருந்தா ளுனர் முருகபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக நர்சு சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News