உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 197 பள்ளி வாகனங்களை இயக்க தடை

Published On 2023-05-31 09:38 GMT   |   Update On 2023-05-31 09:38 GMT
  • கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ேபாக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள பஸ்கள் மட்டும் இயக்க தகுதி சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடப்பாண்டு பள்ளிகள் திறக்கும் முன்பே, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங் களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள னர். இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் பெரும் பாலான வாகனங்களில் சி.சி.டி.வி காமிரா, சென்சார் கருவி உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்படவில்லை. மேலும் சில பஸ்களில் சீட் பெல்ட், மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தது. இதனால் இந்த 197 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப் படவில்லை. குறைப்பாடு கண்டறியப்பட்ட வாகனங்கள், குறைபாட்டை நிவர்த்தி செய்த பிறகே தகுதிச்சான்று வழங்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News