உள்ளூர் செய்திகள்

கொரோனா மையத்தில் காப்பர் பைப் திருடிய 2 பேர் கைது

Published On 2023-08-08 14:51 IST   |   Update On 2023-08-08 14:51:00 IST
  • சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.
  • இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சேலம்:

சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு இருந்த 6 கிலோ காப்பர் பைப்பை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து சரவணன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த முகமது அசின் ஷெரீப், விஸ்வநாதன் 2 பேரும் காப்பர் பைப் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News