உள்ளூர் செய்திகள்

சேலம் ஆயுதப்படை ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-12-15 14:59 IST   |   Update On 2022-12-15 14:59:00 IST
  • சேட்டு என்ற மணிகண்டன். பிரபல ரவுடியான இவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
  • பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ் ஏட்டு மணிக்கும், ரவுடி மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சேலம்:

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேட்டு என்ற மணிகண்டன். பிரபல ரவுடியான இவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த ரவுடி மணிகண்டனுக்கு உடல்நல கோளாறு காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கபப்ட்டது.

அந்த அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ் ஏட்டு மணிக்கும், ரவுடி மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஏட்டு, ரவுடிக்கு செல்போன், கஞ்சா, சாப்பாடு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்ததாகவும், இதற்காக ரவுடியிடம் ரூ. 25 ஆயிரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சேலம் மாநகர நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.,

இது தொடர்பாக டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் விசாரணை நடத்திஏட்டு மணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடாவுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆயுதப்படை ஏட்டு மணி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News