உள்ளூர் செய்திகள்

ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

Published On 2022-07-27 03:13 GMT   |   Update On 2022-07-27 03:13 GMT
  • கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது.
  • மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

சென்னை :

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள 'ஹர் கார் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணம்) இயக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான 75 நாள் பிரசாரம் குறித்து மத்திய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-

நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக 'ஹர் கார் திரங்கா' (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும்? என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News