உள்ளூர் செய்திகள்
வார சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கறவை மாடுகளை படத்தில் காணலாம்.
ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
- மாடுகள், எருமை மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெற்று வருகிறது.
இச்சந்தைககு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,500 முதல் ரூ. 37,000 வரையும், ஆடுகள் ரூ.6,000 முதல் ரூ.10,300 வரையும், ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.