உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பயிற்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

கட்டுமான பணி இடங்களில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-03-24 09:14 GMT   |   Update On 2023-03-24 09:14 GMT
  • டி.பி. சோலார் நிறுவன கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
  • மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

நெல்லை:

தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டு தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் டி.பி. சோலார் நிறுவன (தி டாடா பவர் நிறுவனம்) கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

இதில் டி.பி. சோலார் நிறுவன கட்டுமான பணியிடத்தின் 100 தொழிலாளர்கள், நெல்லை தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), டாடா புரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நிபுணர் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலா ளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழி லாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவரின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இத்தகவலை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சஜின் தெரிவித்தார்.

Tags:    

Similar News