உள்ளூர் செய்திகள்
உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடந்தது.
மேலமறைக்காடர் கோவிலில் ருத்ர யாகம்
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் உள்ள வேதநாயகி அம்பாள் உடனுறை மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்று மேலமறைக்காடர், வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மன்றத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.