உள்ளூர் செய்திகள்

ரூ.70 லட்சம் நகை மோசடி வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு'

Published On 2023-03-25 09:24 GMT   |   Update On 2023-03-25 09:24 GMT
  • கோமதி நாயகம் என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

நெல்லை:

பாளை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது42), வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான 246 பவுன் தங்க நகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கே.டி.சி. நகரை சேர்ந்த கோமதி நாயகம் (41) என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார். இதனால் கோமதி நாயகம் நகைகளை மீட்டு ரமேஷ்குமாரிடம் கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

பலமுறை ரமேஷ்குமார் தன்னிடம் நகைகளை தருமாறும், அதற்குரிய பணத்தை தருவதாக கூறியும் அவர் கொடுக்கவில்லை. மேலும் நகைகளை கொடுக்க மறுத்த கோமதி நாயகம் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையாவிடம் விவரம் கூறினார்.

பின்னர் சகோதரர்கள் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தர வின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் அவரது சகோதரர் கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணை யாவை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News