ஆர்.எஸ்.புரம் அருகே பூட்டிய கடையில் திடீர் தீ விபத்து
- பாலகிருஷ்ணன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
- ரூ.87 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கோவை,
கோவை எஸ்.எஸ். குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). இவர் ஆர்.எஸ். புரம் டி.வி. சாமி ரோட்டில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அவர் கடையைவழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் கடையில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து கடைக்காரர் கடை தீப்பிடித்து எரிவதை பாலகிருஷ்ணனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் தீயை போராடி அணைத்தனர். இருந்த போதிலும் ரூ.87 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பூட்டிய கடைக்குள் தீப்பி டித்தது எப்படி? மின் பழுதால் தீப்பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீவைத் தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.