உள்ளூர் செய்திகள்

கோவையில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.45 லட்சம் மோசடி

Published On 2023-09-29 14:46 IST   |   Update On 2023-09-29 14:46:00 IST
  • கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் நகையை அடகு வைத்தார்.
  • பைனான்ஸ் நிறுவனத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

கோவை,

கோவை நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (36). கணபதியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு சிங்காநல்லூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் 69.02 கிராம் நகையை அடகு வைத்து ரூ.2.45 லட்சம் கடன் பெற்றார். நீண்ட நாட்களாக அவர் நகைக்கு உரிய வட்டியும், அசலும் செலுத்தவில்லை.

இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் அந்த நகையை ஏலத்தில் விட முடிவு செய்தனர். அப்போது அந்த நகையை பரிசோதனை செய்த போது, அது போலியானது என்பதும், தங்க முலாம் பூசப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனத்தினர் கிருஷ்ணவேணியை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார்.

ஆனால் அதன்பின்பும் நீண்ட நாட்களாக அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மோசடி பிரிவில் கிருஷ்ணவேணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News