உள்ளூர் செய்திகள்

கூடலூரில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி-ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்

Published On 2023-04-19 14:49 IST   |   Update On 2023-04-19 14:49:00 IST
ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆ.ராசா எம்.பி. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

தொடர்ந்து அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

அவருடன் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில பொறியாளா் அணி துணை செயலாளா் பரமேஸ்குமாா், நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

Tags:    

Similar News