உள்ளூர் செய்திகள்

தட்டிக்கேட்ட வாலிபரை வாளால் மிரட்டிய ரவுடி கைது

Published On 2023-03-04 15:04 IST   |   Update On 2023-03-04 15:04:00 IST
  • நாராயணன் தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
  • கண்ணனை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனர்.

நெல்லை:

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கீழக்கல்லூர் வடக்குதெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் சக்தி நாராயணன்(வயது 19).

இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது தாயாருடன் சுத்தமல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சேரன்மகாதேவி தேரடி தெருவை சேர்ந்த கண்ணன் என்ற காவு கண்ணன்(23) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சக்தி நாராயணன் மோட்டார் சைக்கிளை முந்தி செல்லும் போது அவர்கள் மீது இடித்து விடுவது போல் கண்ணன் சென்றுள்ளார். இதனை சக்தி நாராயணன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தான் வைத்திருந்த வாளை எடுத்து தாய் -மகன் இருவரையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சக்திநாராயணன் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கைது

தகவலறிந்த சப்–இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான கண்ணன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News