உள்ளூர் செய்திகள்

அம்மனுக்கு தொட்டில் ஆட்டி நேர்த்திக்கடன்

Published On 2023-01-22 14:46 IST   |   Update On 2023-01-22 14:46:00 IST
  • பிரசித்தி பெற்ற தொட்டில் அம்மன் கோவில் உள்ளது.
  • பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்ச ம்பள்ளி அருகேயுள்ள என்.தட்டுக்கல் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரத்தில் கம்பர் மலை அமைந்து ள்ளது. இங்கே பிரசித்தி பெற்ற தொட்டில் அம்மன் கோவில் உள்ளது.

நேற்று தை அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி அம்மனை தரிசனம் செய்தனர்.

குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடக்க வேண்டியும் வழிபட்டனர். மேலும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அம்மனுக்கு புதியதாக தொட்டில் வைத்து குழந்தைகளை போட்டு ஆட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News