கோவையில் வழிப்பறி: 7 வாலிபர்கள் கைது
- கணபதி சங்கனுர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்த 4 பேர் சிக்கினர்
- ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராகேஷ் (20), என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37), இவர் நேற்று மாலை கணபதி சங்கனுர் பகுதிக்கு சென்றார். அப்போது 4 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்து தப்பிச்சென்றனர்.
ரத்தினபுரி போலீசாரின் விசாரணையில் ராமச்சந்திரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த குண்டு சரவணன் (31), பங்க் கார்த்திக் (30), புறாகூண்டு ரஞ்சித் (26),கோபிநாத் (28) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை சுகுநாபுரத்தை சேர்ந்த ரவிகுமார் (30) என்பவர் கோவை சாய்பாபா கோவில் பகுதியில் பழவியாபாரம் செய்தபோது ரூ.125 பணம் பறித்ததாக, ரத்தினபுரியை சேர்ந்த விமல்குமார் (30), அஜித்குமார் (23) ஆகிய 2 பேரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராகேஷ் (20), என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ரத்தினபுரி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் சரகங்களில் நேற்று மட்டும் ஒரே நாளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக, 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.