உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே அரசு பெண் டாக்டரிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது:7.5 பவுன் செயின் பறிமுதல்

Published On 2023-08-11 07:40 GMT   |   Update On 2023-08-11 07:40 GMT
  • மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.
  • விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் மணியரசி (வயது 27), இவர் புலியூர்காட்டு சாகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணிபுரந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புலியூர் காட்டு சாகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சிறு தொண்டைமாதேவி அருகே வந்து கொண்டிருந்தபோது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அரசு பெண் டாக்டர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டான்.

இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின்படி பெண் டாக்டரிடமிருந்து செயினை பறித்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். இவர் நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்த விக்கி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விக்கியை கைது செய்தனர். அவரிடமிருந்த 7.5 தாலி செயினை மீட்டனர். தாலி செயின் பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தி லேயே கொள்ளையனை கண்டறிந்த பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

Tags:    

Similar News