உள்ளூர் செய்திகள்

நோய் தாக்கிய நெற்பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயி.

நெற்பயிரை தாக்கும் ஆணை கொம்பன் நோயால் மகசூல் குறையும் அபாயம்

Published On 2022-10-30 08:58 GMT   |   Update On 2022-10-30 08:58 GMT
  • குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
  • நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.

அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.

இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.

அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News