உள்ளூர் செய்திகள்
பாளையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
- ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
- கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
நெல்லை:
ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் நேற்று இரவு பாளை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் பாளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகனுக்கு குலதெய்வ கோவில் பாளை கோட்டூர் ரோட்டில் உள்ளதாக தெரிகிறது.
இந்த கோவிலை நிர்வகிப்பது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது தொடர்பாக வேல்முருகனுக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.