உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே காட்டுப்பகுதியில் மயங்கி கிடந்த பெண் மீட்பு

Published On 2022-12-09 14:59 IST   |   Update On 2022-12-09 14:59:00 IST
  • திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
  • கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி கொட்டாங்காடு காட்டுப்பகுதியில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பராமரிக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் உடனடியாக இல்ல பணியாளர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டார்.

அந்த பெண் காய்ச்சல் அறிகுறியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு உணவளித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் அவரது பெயர் தேன்மொழி எனவும், அவரது வீட்டு முகவரியும் தெரிவித்தார். கடந்த 5 நாட்களாக தேன்மொழியை காணவில்லை என அவரது வீட்டினர் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் தேன்மொழியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மனிதாபிமான அடிப்படையில் உயிரைக் காப்பாற்றிய போலீசார் மற்றும் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News