உள்ளூர் செய்திகள்

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிட பணியை படத்தில் காணலாம் 

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய கட்டிட பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Published On 2022-06-15 06:14 GMT   |   Update On 2022-06-15 06:55 GMT
  • புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
  • பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென போலீசாரும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் திருமுருகநாதசுவாமி கோவில் அருகே சிறிய கட்டடத்தில் செயல்படுகிறது. போலீசார் நெருக்கடியில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். புகார் கொடுக்கும் வரும் பொதுமக்கள் அமரஇடமின்றி ரோட்டில் நிற்கின்றனர்.இதனால்பூலுவபட்டி செல்லும் ரிங் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையத்தில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.கடந்த 2021 ஜூனில் இருந்து கட்டுமான பணி துவங்கியது. தரைத்தளம் உள்ளிட்ட இரண்டு மாடியில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறை, 4 கைதிகள் அறை, கம்ப்யூட்டர் அறை, புகார் மனுதாரர்கள் அமரும் அறை, மீட்டிங் ஹால், பார்க்கிங் என அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது.கட்டட பணி இந்த மாதத்துடன் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கட்டுமான பணி இழுபறியாகியுள்ளது.பணியை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென போலீசாரும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News