உள்ளூர் செய்திகள்

பேரூர் செட்டிபாளையத்தில் இடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-11-27 09:26 GMT   |   Update On 2023-11-27 09:26 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
  • கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

கோவை. 

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் வந்து மனு அளித்தனர். கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் 25 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி விட்டது. தற்போது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஒரு மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News