உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுன் வழுக்கோடை பகுதியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றிய காட்சி.

நெல்லை மாநகர பகுதிகளில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்

Published On 2022-12-10 09:50 GMT   |   Update On 2022-12-10 09:50 GMT
  • நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
  • சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை:

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, பாளை பகுதிகளில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News