உள்ளூர் செய்திகள்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தென்னந்தோப்பை மீட்ட அதிகாரிகள்.

பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் நிலம் மீட்பு

Published On 2022-09-22 09:46 GMT   |   Update On 2022-09-22 09:46 GMT
  • கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
  • கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர்அடுத்த ஆலங்குடி நெடாரில்பிரம்ம புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் வட்டாட்சியர் சங்கர்,

கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் பணியாளர்கள் கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர் .

தொடர்ந்து தோப்பு மீட்கப்பட்டு அதே இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அதில் தென்னந்தோப்பு கோவிலுக்கு சொந்தமானது ஆகும்.

இங்கு யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.

மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News