உள்ளூர் செய்திகள்

போரூர் ராமநாதஸ்வரர் கோயில்

போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்ரமிப்பு சொத்துக்கள் மீட்பு

Published On 2022-07-30 08:27 GMT   |   Update On 2022-07-30 08:27 GMT
  • வாடகைக்கு பெற்றிருந்த 4 நபர்கள் அதிக அளவு வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
  • 40 நபர்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னையை அடுத்த போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்பாகவும், வணிக பயன்பாட்டிற்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

குன்றத்தூர் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு 5.5 கிரவுண்ட் மனையினை வாடகைக்கு பெற்றிருந்த 4 நபர்கள் வாடகை செலுத்தாமலும், 40 நபர்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.

நியாய வாடகையை செலுத்தாமல் அதிக அளவு வாடகை பாக்கி வைத்திருந்ததால் இவர்கள் மீது இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பின்படி காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் அச்சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 13 கோடி ஆகும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News