அமைச்சர் ஆர்.காந்தி வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய காட்சி.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் உடற்தகுதி சங்கம், அர்னால்டு கிளாசிக் ஜிம் ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான ஆணழகன் போட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
போட்டிக்கு சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பிச்சை முத்து தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஜிம்.ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
மண்டல அளவிலான இந்த ஆணழகன் போட்டியில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போட்டியாள ர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் முதல் பரிசாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூவி, 2-வது பரிசாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் , 3-வது பரிசாக ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் உடற்தகுதி சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.கே.குருநாதன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டி பரிசளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.