உள்ளூர் செய்திகள்
- போலீசார் விசாரணை
- பைக் பறிமுதல் செய்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் யுவராஜ் (25).இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
இது தொடர்பாக யுவராஜ் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் ராஜேஸ்வரி தியேட்டர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஒட்டி வந்த பைக் திருட்டு போன யுவராஜின் பைக் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.