உள்ளூர் செய்திகள்

புத்தபிக்குகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்

Published On 2023-01-13 15:19 IST   |   Update On 2023-01-13 15:19:00 IST
  • செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரக்கோணம்:

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமை ஒருங்கினைப்பாளர் கௌதமசன்னா அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடுபௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயற்குழு கூட்டம் மேல்மருவத்தூர் அசோகா புத்த விகாரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விகார் கவுன்சில் மகா சங்க செயலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

சங்க பொருளாளர் கோவி.பார்த்திபன், தமிழ்நாடு அரசு மாவட்ட சிறுபான்மை உறுப்பினர்கள் அவை செயலாளர் போதிசந்திரன், பௌத்த இளையோர் கழக செயலாளர் தம்மதேவா, கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் தம்மதர்மேந்திரா, பௌத்த பெண்கள் கழக துணை செயலாளர் ஆர்.டி.லட்சுமிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர், மகா துணை சங்காதிபதி பிக்கு நாகராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

பிக்குகளுக்கு விகார்களை நிர்வகிக்கும் சங்கரத்தினர்களுக்கு அரசிடம் உதவித் தொகை பெற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News