உள்ளூர் செய்திகள்
- வாக்குவாதம் முற்றியதில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 21). இவர் அரக்கோணம் மங்கம்மாபேட்டை கேட் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புட்டுமணி என்கின்ற மணி (18), ஆகாஷிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து ஆகாஷை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணியை தேடி வருகின்றனர். குற்றவாளியாக ேதடப்பட்டு வரும் மணி பல்வேறு குற்ற சம்பவ வழக்குகளில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.