சுப்பிரமணியசாமி கோவில் கிருத்திகை விழா
- மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானை சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்தியான சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.மங்கள வாத்தியங்களுடன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வேடந்தாங்கல், கர்ணாஊர், மகேந்திரவாடி, பானாவரம், புதூர், வீராணம், புதுபட்டு, மேல் வீராணம், மங்கலம், பொன்னப்பன் தாங்கள், கன்னிகாபுரம், கூத்தபம்பாக்கம், வடல்வாடி, குப்பகல்மோடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.