உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் கூட்டம் நடந்த காட்சி.

கடைகளில் பிளாஸ்டிக், போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை

Published On 2023-06-23 14:38 IST   |   Update On 2023-06-23 14:38:00 IST
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
  • கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது.

மீறினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல்,

கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் நீர் நிலைகளை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குப்பைகளை சேகரிக்க வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டது.

இதில் பேரூராட்சி துணை தலைவர்,மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News