உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் பேசிய காட்சி.

சாயப்பட்டறை கழிவு நீரால் மாசு ஏற்படுகிறது

Published On 2023-05-05 14:52 IST   |   Update On 2023-05-05 14:52:00 IST
  • நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
  • அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர்

அரக்கோணம்:

நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அரிகலபாடி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர் வினோத்குமார் உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த தலைவர் பெ.வடிவேல் பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் தான் வழங்க முடியும் என்றார்.

பின்னர் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் அசநெல்லிகுப்பம் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா அசநெல்லிகுப்பத்தில் அனுமதியின்றி சாயபட்டறை இயங்கி வருகின்றது.

இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆறு, அசநெல்லிகுப்பம், நெல்வாய் கண்டிகை பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் மாசடைகின்றது.

இது குறித்து கலெக்டர், மாசு கட்டுபாட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

ஒன்றியக்குழு கூட்டத்தில் பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிவறைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News